2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

பிரபல இளம் நடிகை விபத்தில் பலி

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல வங்காள மொழி நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு ஒன்றில் சுசிந்திரா தாஸ்குப்தா பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி சுசிந்திரா தாஸ்குப்தா பலியானார். கொல்கத்தாவில் பராநகர் கோஷ்பாரா பகுதியில் சுசிந்திரா தாஸ்குப்தா வந்தபோது அவர் சென்ற வாகனம் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுசிந்திரா தாஸ்குப்தா மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுசிந்திரா தாஸ்குப்தா உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 29. படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்று அவரது கணவர் தேப் ஜோதி சென்குப்தா தெரிவித்து உள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .