Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5ஆவது சீசன் நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அந்தத் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
அவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
26 Aug 2025