Editorial / 2021 மே 21 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியானது சென்னையிலுள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியானது கொரோனா விதிமுறைகளை மீறி, நடைபெற்று வந்ததாகவும் இதனால் அதில் கலந்து கொண்ட ஆறு போட்டியாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னைப் பொலிஸார் அதிரடியாக பிக்பொஸ் நிகழ்ச்சி நடந்த செட்டை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.

மேலும் பிக்பொஸ் குழுவினரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் விதிமுறைகளை மீறியதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago