Ilango Bharathy / 2021 ஜூலை 04 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ்-3 இல் கலந்து கொண்டு பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் பிக்பொஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சில் கலந்து கொண்டு நடனமாடி வந்தார்.
இந்நிலையில் வனிதா திடீரென குறித்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” பிக்பொஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்குப் பாராட்டுகளும், ஆதரவும் தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.எனினும் நான் இந்நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறுகிறேன்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் விஜய் தொலைக்காட்சி எனது குடும்பமாகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். எங்களுக்குள் நல்ல மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டேன், இதற்கு அவரது ஆணவம் காரணமாக இருக்கலாம், அல்லது அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியாமல் இருக்கலாம்.
வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் தான் மோசமாக நடத்துகின்றனர், பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை நாசமாக்குகின்றனர். இருப்பினும் நான் எனது திரைப்பட வேலைகளில் மும்முரமாக இருப்பதால் தொடர்ந்து நீங்கள் என்னைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.
என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர், கடுமையாக உழைத்து முன்னேறியவர், முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கீழ்மையாகப் பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது.
குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பத்தின், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார்.
பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றக் கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago