Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (27) காலமானார்.
யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார். ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
32 minute ago
36 minute ago