2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. 70 மற்றும் 80களின் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ள படத்தில் அவர்களுக்காக பின்னணி பாடியுள்ளார்.

உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற “பால் போலவே” என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் பாடுவதை அவர் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி.சுசிலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X