Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 வயதான பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் க்கு நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டவே, மும்பை லீலாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்தனர்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டு குணமடைந்தார்.
இத நிலையில், சஞ்சய் தத்துக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .