Mayu / 2024 ஜூன் 13 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த உறுதுணை நடிகர் பிரதீப் கே.விஜயன் (வயது 45) வியாழக்கிழமை (13) சென்னையில் காலமானார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான ‘தெகிடி, வட்டம், டெடி, ‘லிஃப்ட், இரும்புத் திரை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவும், ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை பாலவாகத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களாக பிரதீப் வீட்டை விட்டு வெளியே வரவலில்லை எனவும், அவரது நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொலிஸாரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
4 minute ago
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
2 hours ago