Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 28 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல்(22) வீதி விபத்தில் மரணமடைந்தார்.
கர்நாடகாவின் மடிகேரி என்னும் நகரத்தைச் சேர்ந்தவர் மெபினா மைக்கேல். கன்னட சின்னத்திரையில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பியாட்டே ஹுதுஹிர் ஹள்ளி லைப்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பெரும் புகழடைந்தார்.
இந்தநிலையில் புதன்கிழமை(27) அவர் தனது நண்பர்களுடன் தனது சொந்த ஊரான மடிகேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவிஹள்ளி என்னும் பகுதிக்கு அருகே வந்தபோது அவர் பயணம் செய்த காரானது எதிரே வந்த ட்ரக்டருடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த நால்வருமே பலத்த காயமடைந்தனர்.
சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மெபினா மரணமடைந்தார். இதுதொடர்பாக பெல்லூரு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago