Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றையதினம் பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங்.
அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago