Editorial / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி ராவ்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் இவர் சமீபத்தில் தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனக்கு பல்வேறு இலக்கங்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும், அவர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் கூறி சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நடிகை கூறிய நபர்களுக்கு தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய பொலிஸார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
அதில் ஆபாச வீடியோக்களை பகிரும் வாட்ஸ் அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவ்வின் நம்பரை ஒருவர் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார் .
இதையடுத்து நடிகை காயத்ரி ராவ் நம்பரை பதிவிட்ட நபரை பிடித்து விசாரித்ததில், அது டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணையில், நடிகை காயத்ரி ராவ் கடந்த பிப்ரவரி 9ஆம் திகதி பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அப்போது டெலிவரி ஊழியராக வந்த பரமேஸ்வரன் ஆர்டரை பிக் அப் செய்ததிலிருந்து பலமுறை அழைப்பு மேற்கொண்டு காயத்ரியை தொல்லை செய்துள்ளார்.
இதனால் அவர் தனது வீட்டிற்கு ஆர்டருடன் வந்ததும் நடிகை காயத்ரிக்கும் டெலிவரி பாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆத்திரத்தில் நடிகை காயத்ரி ராவின் நம்பரை வாட்ஸ் அப் குரூப்பிலும், ஆபாச இணைய தளங்களிலும் பதிவிட்டது தெரியவந்தது.
இந்த விவகாரத்தால் சம்மந்தப்பட்ட பீட்சா நிறுவனம் பரமேஸ்வரனை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago