Editorial / 2023 ஜனவரி 02 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கிஷோர் கடந்த ஆண்டு ஏகப்பட்ட பெரிய திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து அசத்தி உள்ளார்.
2022ல் மட்டும் ஆச்சார்யா, சேகர், டைரி, டிராமா, காந்தாரா, பொன்னியின் செல்வன், மஞ்ச குருவி உள்ளிட்ட படங்களிலும் ஷீ, பேட்டைக்காளி உள்ளிட்ட வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி கடந்த ஆண்டு இந்தி வெப்சீரிஸிலும் கிஷோர் சும்மா புகுந்து விளையாடி உள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான She வெப்சீரிஸில் நாயக் எனும் கதாபாத்திரத்தில் போதை பொருள் கடத்தல் செய்யும் மாஃபியா கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பார். இவரை பிடிக்க அந்த வெப்சீரிஸின் நாயகி அதிதி போஹன்கர் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக வந்து இவர் மீது காதல் வயப்படும் கட்டிலறை காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கின.
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026