2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புதிய அவதாரம் எடுத்த லொஸ்லியா

Ilango Bharathy   / 2021 ஜூலை 05 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து  வழங்கி  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ்-03 நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு  பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா மரியநேசன்.

இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு திரைப் பட வாய்ப்புக்களும் குவிந்து வருகிறன. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன.

இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜோன் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லொஸ்லியா நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில்  இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்துப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லொஸ்லியா.

இப் பாடலானது தற்போது  ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X