Freelancer / 2024 ஜூலை 04 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் திகதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.
பொலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், போய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம், திரையரங்குகளில் ஓடி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து இரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, இப்படத்தில் எடிட்டிங் பணிகளைச் செய்த பிலோமின் ராஜை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தத் திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 14ஆம் திகதி வெளியாகி 18 நாட்களைக் கடந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் ரூ.100 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.S
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago