Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘அட சின்ன பையன் மாதிரி இருக்காரே. இவரா இயக்குனர்?’ என பலரும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், அவரின் படைப்பை பார்த்து ஆச்சிரியப்பட வைத்தார். ஜெயம்ரவியை சிறப்பாக நடிக்க வைத்து ரசிகர்களை கவரும்படி திரைக்கதை அமைத்திருந்தார்.
வளரும் இயக்குனராக இருக்கும் நேரத்தில் பெரிய ஹீரோவை வைத்து படமெடுப்பதை விட்டுவிட்டு எதற்கு இந்த விபரீத ஆசை?’ என திரைத்துறையில் பலரும் நினைத்தனர். ஆனால் ‘லவ் டுடே’ படத்தை கொடுத்து மீண்டும் ஆச்சிரியப்படுத்தியிருந்தார். இந்தப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் 80 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் கூட ‘இனிமேல் நான் இயக்கும் படத்தில் நான் மட்டுமே ஹீரோவாக நடிப்பேன்’ என அவர் சொல்லிவிட்டதாக செய்திகள் கசிந்தது. இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
இந்த பட வேலைகள் இப்போது ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், முகம் அழகாக மாற வேண்டும் என்பதற்காவும், நிறம் மாற வேண்டும் என்பதற்காகவும் சில சிகிச்சைகளை பிரதீப் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சையை திரையுலகில் பலரும் இப்போது செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், பிரதீப்புக்கு அது செட் ஆகாமல் முகம் வெள்ளையாக மாறி வெளுத்து போய்விட்டதாம். அவரை பார்க்கிற எல்லோரும் ‘என்ன பிரதர். வெள்ளைக்காரன் மாதிரி இருக்கீங்க?’ என கேட்க துவங்கிவிட்டார்களாம். இதோ தோற்றத்துடன் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பாரா? இல்லை..மீண்டும் எதாவது சிகிச்சை செய்வாரா என்பது தெரியவில்லை.
9 minute ago
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
46 minute ago