Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தினால், 14 வயதில் தான் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டதுடன் பெண்ணியவாதியாகவும் மாறிவிட்டதாக என்று பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
'யூ டர்ன்' என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் 'நேர்கொண்ட பார்வை', 'காற்று வெளியிடை', 'விக்ரம் வேதா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் 'மாறா' மற்றும் 'சக்ரா' ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
ஷ்ரத்தா தனது பதிவில், 'எனக்கு 14 வயது இருக்கும்போது குடும்பத்தினருடன் ஒரு பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது எதிர்பாராமல் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அம்மா அங்கு என்னுடன் வரவில்லை. அதனால் அருகில் இருக்கும் என்னுடைய ஆன்ட்டியிடம் அது குறித்து கூறினேன். மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன்.
என் பக்கத்தில் இருந்த வேறொரு பெண் நான் பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு நான் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, "பரவாயில்லை குழந்தை, கடவுள் உன்னை மன்னித்து விடுவார்" என்று கூறினார்.
மாதவிடாய் நேரத்தில் பூஜையில் கலந்துகொண்டதற்காகத் தான் அவர் இவ்வாறு கூறினார். அந்த நாள் எனது 14 வயதில் நான் பெண்ணியவாதியாக மாறிவிட்டதுடன் கடவுள் நம்பிக்கையும் இழந்து விட்டேன்" என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
44 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago