Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், நடிகை சஞ்சனா கல்ராணியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.
"நிமிர்ந்து நில்" தமிழ்ப் படத்தில் நடித்த கன்னட நடிகை ராகினி திவேதி போதை மருந்து விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், "டார்லிங்", "சார்ளி சாப்லின்-2" போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணியும் தற்போது போதை மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் வெளியான நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் இன்று காலை, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். போதைப் பொருள் வழக்கில், அடுத்தடுத்து கன்னட நடிகைகள் சிக்கி வருவது, கன்னட திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
39 minute ago