2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பேசியபடி சம்பளத்தை தராததால் வழக்கு

George   / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் தான் நடித்த ஜாஸ்பா திரைப்படத்தில் தனக்கான சம்பளம் முழுமையாக வழங்கப்படவில்லை என அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தீர்மானித்துள்ளாரம்.

இந்தத் திரைப்படத்தில்  நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு 3 கோடி இந்திய ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதில் ஒரு கோடி இந்தி ரூபாய், திரைப்படத்தின் கொடுக்கப்பட்டுள்ளதுடன் மிகுதி பணத்தை திரைப்பட தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோதே நிதி சிக்கலில் சிக்கிய தயாரிப்பாளர், திரைப்படம் முடிந்தும் சம்பளம் கொடுக்காதால் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இந்தப் படம் எதிர்பாராதவிதமாக வெற்றிப்பெறவில்லை என்பதால் தயாரிப்பாளரால் சம்பளத்தை கொடுக்க இயலவில்லை. 

எனினும், தயாரிப்பு செலவை விட அதிகமாக திரைப்படம் வசூலித்துள்ளது. ஆனால், தயாரிப்பாளர்தான் சம்பளம் தரமல் ஏமாற்ற பார்க்கிறார் என்று நினைக்கும் ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரவும் தீர்மானித்துள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X