George / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

உதயன், சகுனி, மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. தற்போது “எனக்கு வாய்த்த அடிமைகள்”, “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” ஆகியத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்பு தமிழில் நடித்த திரைப்படங்கள் தன்னை ஏமாற்றியபோதும், இந்த புதிய திரைப்படங்கள் வெற்றி பெற்று தமிழில் நிலையான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றார்.
பிரணிதாவுக்கு ஒரு திரைப்படத்திலேனும் டொக்டர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது இலட்சியமாக உள்ளதாம்.
காரணம், அவரது அப்பா-அம்மா இரண்டு பேருமே பெங்களூரில் டொக்டர்களாக உள்ளார்களாம். ஒரே மகளான பிரணிதாவையும் டொக்டராக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருந்ததாம்.
ஆனால், நிஜத்தில் அப்படி ஆகவில்லை என்பதால், திரைப்படத்திலாவது டொக்டராக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .