2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

போராட்டக் களத்தில் நயன்தாரா

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில்சல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட் மாட்டோம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

கருப்பு நிறத்தில் டாப்ஸ் அணிந்து முகத்தை கருப்பு துணியால் மூடியபடி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நயன்தாரா போராட்டத்தில் கலந்து கொண்டார்.  

முன்னதாக ‘’இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இநத தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது’’ என சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நயன்தாரா அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X