S.Renuka / 2026 மார்ச் 12 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், தற்போது தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்சிகா முதலில் ஹிந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் கதாநாயகியாக மாறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தமிழில் தனுஷ் நடித்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் வேலாயுதம், மான் கராத்தே, சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
சிம்பு நடித்த “வாலு” திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலை அவர்கள் பொதுவெளியிலும் வெளிப்படையாக பகிர்ந்திருந்தனர். சில ஆண்டுகள் காதலில் இருந்த பின்னர் இருவரும் திடீரென பிரிந்தனர். அந்த பிரிவுக்கான காரணம் குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்தாலும், இருவரும் அதைப் பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தனர்.

அதன்பின் 2022ஆம் ஆண்டு தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார்.
காதல் திருமணமாக நடைபெற்ற இந்த உறவு நீண்ட காலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மத விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவாகரத்திற்கான காரணம் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணத்திற்கு பிறகு இருவரும் முதலில் கூட்டு குடும்பமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகள் பின்னர் பெரிதாக மாறியதாகவும், அதனால் இருவரும் தனியாக குடியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியாக வாழ்ந்த பிறகும் தம்பதியருக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகள் ஏற்பட்டதால், இனிமேலும் ஒன்றாக வாழ்வது சிரமம் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விவாகரத்தில் ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக தமிழ் சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகமாக பேசப்படும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது நடிகை ஹன்சிகாவும் இணைந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago