2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மனம் திறந்தார் சிம்பு!

J.A. George   / 2022 மார்ச் 15 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். பாடல் ஒன்றை இயக்கியுள்ள ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதாவது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X