Editorial / 2021 மே 26 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் உன்னி தேவ். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்தபோது இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் உன்னி தேவ் மீது பிரியங்கா அண்மையில் பொலிஸாரிடம்” கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும்” புகார் அளித்திருந்தார். இந் நிலையில் புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தற்கொலை செய்துள்ளமை அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் பிரியங்கா இறந்ததாகவும், இதனால் உன்னிதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரியங்காவின் உறவினர்கள் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து உன்னி தேவ்வை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தகக்து.
20 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
43 minute ago
1 hours ago