J.A. George / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற சந்தேகத்தை அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று கிளம்பியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் மூலம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
இவர் தற்போது தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாளவிகா பதிவு செய்துள்ள புதிய புகைப்படத்தில் அவரது காலில் மெட்டி இருப்பது போன்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மாளவிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் புகைப்படத்துக்காக அவரது காலில் செய்யப்பட்ட அலங்காரத்தில் ஒரு பகுதிதான் அது என்றும், அது மெட்டி போல ரசிகர்களுக்கு தெரிகிறது என்றும் மாளவிகா மோகனன் தரப்பினர் கூறுகின்றனர்.
3 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago