Freelancer / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு, இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. மிர்கயா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். தொடர்ந்து பொலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்தார்.
குறிப்பாக இவரின் ‛டிஸ்கோ டான்சர்' படம் ஹிந்தி சினிமாவை தாண்டி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ‛ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர்' பாடல் மிகவும் பிரபலமானது.
தி நக்சலைட்டிஸ், கவாப், கஸ்தூரி, சித்தாரா, ஹிம்மத்வாலா, அக்னிபாத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சில படங்களை தயாரித்துமுள்ளார்.
மேலும் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1989ஆம் ஆண்டில் 19 படங்களில் நடித்தமைக்காக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
தற்போது 74 வயதான மிதுன் சக்கரவர்த்தி, மூன்று முறை தேசிய விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இந்தாண்டு பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலிலும் உள்ள இவர் தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். முன்னாள் ராஜ்யசபா எம்பி.,யாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், சினிமாவில் இவரது கலைச் சேவையை பாராட்டி மத்திய அரசு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதை அறிவித்துள்ளது.S
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025