Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது.
இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வந்த ’மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் படப்பிடிப்பின் கடைசி நாளில் படக்குழுவினர் அனைவரும் பிரியாணி தயார் செய்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தில் யோகி பாபு, ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா நடிப்பில் உருவாகிய இந்த படத்தை லதா மணியரசு என்பவர் இயக்கியுள்ளார்.

கார்த்திக் இசையில், கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025