2025 மே 05, திங்கட்கிழமை

மீண்டும் ஐட்டம் டான்ஸ்?

J.A. George   / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஆடிய ’ ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் டான்ஸ் பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, சமந்தாவை அடுத்து ரெஜினா, தமன்னா உள்பட மேலும் சில முன்னணி நடிகைகள் ஒருசில திரைப்படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் இன்னொரு மாஸ் நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லிகர்’ என்ற திரைப்படத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X