2025 மே 19, திங்கட்கிழமை

முந்தானையில் முடிய அனுஷ்கா மறுப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'முந்தானை முடிச்சு-2' திரைப்படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றன. அதில், 'முந்தானை முடிச்சு' திரைப்படமும் ஒன்று.

இது, 1983ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. அந்தத் திரைப்படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருந்தார்.

திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது.

இந்த நிலையில், 'முந்தானை முடிச்சு-2' திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய திரைப்படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X