J.A. George / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் மஹாராஷ்டிராவின் மும்பையில், ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பாம்பு கடித்தது.
இதனை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்தநிலையில் இதுகுறித்து சல்மான் கான் அளித்த பேட்டியில் ”ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது. நான் அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி வெளியே எடுத்தேன். படிப்படியாக அது என் கையை எட்டி என்னை மூன்று முறை கடித்தது.
அது ஒரு வகையான விஷப்பாம்பு. 6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன்; இப்போது நலமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
20 minute ago
47 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
47 minute ago
1 hours ago
6 hours ago