2025 மே 14, புதன்கிழமை

மோடியை சந்தித்தார் கௌதமி

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை கௌதமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அண்மையில் நேரில் சந்தித்துள்ளார்.   

இந்தச் சந்திப்புக் குறித்து கௌதமி, தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமரை சந்தித்த அனுபவம் த்ரில்லாக இருந்தது. மேலும், எங்களைப் போன்ற நட்சத்திரங்கள் பிரதமரைச் சந்திப்பது எளிதாக உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார்.   

கௌதமி, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது மட்டுமன்றி புற்று நோய் விழிப்புணர்வுக்காக பல அரிய சேவைகள் செய்து வருகிறார்.   

இந்நிலையில், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பிரதமரிடம், கௌதமி பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .