2025 மே 14, புதன்கிழமை

மீண்டும் இணையும் புதுஜோடி

George   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் விக்னேஷ் சிவன், முன்னணி நடிகை நயன்தார ஆகிய இருவரும் மீண்டும் இணையவுள்ளனர்.   

“நானும் ரெளடிதான்” திரைப்படத்தை அடுத்து, விக்னேஷ் சிவன், இயக்கவுள்ள “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் சூர்யா, நடிக்கவுள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ், நடிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே செய்தி வெளியானது.   

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி தொடங்கவுள்ளது. ஆனால், படப்பிடிப்பில் நவம்பர் 2ஆம் திகதிதான் சூர்யா, கலந்து கொள்ளவுள்ளார்.   

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத், இசையமைக்கும் இந்த திரைப்படத்தை “ஸ்டுடியோக்ரீன்” நிறுவனம் தயாரிக்கின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .