2025 மே 14, புதன்கிழமை

மீண்டும் இணையும் விஜய் - அட்லி

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலிலும் தெறிக்க வைத்தது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் விஜய் திரைப்படத்தை அட்லி இயக்குவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

விஜய்யின் அடுத்த திரைப்படத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியை அட்லி தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விஜய்யின் 61வது திரைப்படமா? அல்லது 62வது திரைப்படமா? என்ற ஒரே கேள்வி மட்டுமே தற்போது எழுந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 'தெறி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதை மட்டும் அட்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .