George / 2016 ஜூன் 05 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜீத்துக்கு ஜோடியாக அமராவதி திரைப்படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ள போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சங்கவி.
தொடர்ந்து, கே.எஸ்.ரவிக்குமாரின் நாட்டாமை திரைப்படத்தில் நடித்து பாராட்டுப்பெற்றார். அப்படி தொடங்கிய அவரது சினிமா பயணம் 2005ஆம் ஆண்டு வரை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது.
பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே கேரக்டர் நடிகையாக உருவெடுத்த சங்கவி, இதுவரை 80 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு (2016) பெப்ரவரி மாதம் பெங்களூரைச்சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதையடுத்து, என் கணவர் தொடர்ந்து நடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டார் என்று செய்தி வெளியிட்ட சங்கவிக்கு தற்போது தமிழில் மூடர் கூடம் நவீன் இயக்கும் கொளஞ்சி என்றத் திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கவும் தயார் என்று கூறியுள்ள சங்கவி, தனது அபிமான இயக்குநர்களை தொடர்பு கொண்டு மீண்டும் தான் நடிக்க வந்திருப்பதை தெரியப்படுத்தி படவேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025