2025 மே 17, சனிக்கிழமை

மௌனமான மாரி

George   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை திரைப்படத்தை அவருடன் இணைந்து தனுஷ் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம், அண்மையில் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருதையும் பெற்றது.

அந்த விழாவில் ஒரு இந்தியத் திரைப்படம் பெற்ற முதல் விருது என்று பெருமையுடன் அது பற்றிய பத்திரிகைச் செய்தி ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள். ஆனால், இதுவரை அந்தப் பெருமை மிக்க வெற்றியை தான் தயாரிப்பாளராக உள்ள ஒரு திரைப்படம் பெற்றமைக் குறித்து தனுஷ் இதுவரை எந்த ஒரு வாழ்த்தையோ, கருத்தையோ பகிர்ந்து கொள்ளவில்லை.

இதற்கு முன்னர், தனுஷூம் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை திரைப்படம் தேசிய விருதைப் பெற்ற போது அந்தத் திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற சிறுவர்களுக்கும் திரைப்படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும் தங்கச் சங்கலி அணிவித்து பரிசளித்தார்.

அதோடு காக்கா முட்டை திரைப்படத்தைத் தயாரித்ததுப் பற்றி பெருமை பொங்கப் பேசினார். தான் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சின்ன விஷயம் நடந்தாலே அது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் தனுஷ், விசாரணை திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது குறித்து இதுவரை டுவிட்டரில் கூட எந்த விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை, விருது வென்ற செய்தி அவரது காதுகளுக்கு இன்னும் போய் சேரவில்லையோ? என்னவோ...


You May Also Like

  Comments - 0

  • jashan Saturday, 26 September 2015 12:07 PM

    good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .