George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்குறான் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அவர் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்துக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ராஜீவ்மேனன் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், டிரம்ஸ் வாசிக்கும் கலைஞராக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமாவும் ஒஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .