Freelancer / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளித்திரையில் கலக்கி வந்த விஜய் சேதுபதி "பிக் பாஸ்" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். தற்போது அடுத்தடுத்த படங்களை கைவசம் கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் தனியார் கல்லூரியின் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அந்த விழா மேடையில் அவர் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேடைக்கு வந்த விஜய் சேதுபதியிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷா, "நடிகர் அஜித்துடன் இணைந்து எப்போது படம் பண்ணப் போறீங்க? அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி கூறுகையில், "இந்த கேள்வியை என்னிடம் பலர் கேட்டுள்ளனர். ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன். இதற்கு முன் நடப்பதாக இருந்தது ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது.. ஆனால் நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன்" என்று பதிலளித்தார்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago