2025 மே 05, திங்கட்கிழமை

ரகுல் ப்ரீத் சிங்கின் கொண்டாட்டம்

J.A. George   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது 30 ஆவது பிறந்தநாளை பொலிவுட் படக்குழுவுடன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் அக்டோபர் 10, 1990 இல் பிறந்தவர். இவர் பிசிஎஸ்சி ஹானர்ஸ் கணிதம் படித்துக் கொண்டிருக்கும்போதே மொடலிங் துறைக்கு வந்துவிட்டார். 

பட்டப்படிப்பை படித்து முடிப்பதற்கு முன்பே சினிமாவிலும் அறிமுகமாகி விட்டார். அந்தவகையில் “7ஜி ரெயின்போ காலனி“ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகமானார்.

தெலுங்கு மற்றும் தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் “அயலான்“ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

மேலும் நடிகர் கமலுடன் “இந்தியன்2“ திரைப்படத்திலும் இணைந்துள்ளதுடன், இந்தியிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ரகுல் பீரித் சிங்,  “யாரியன்” படக்குழுவுடன் இணைந்து தனது 30 ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X