2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரசிகர்களை மிரட்டும் ‘ஜகமே தந்திரம்‘ ட்ரைலர்

Ilango Bharathy   / 2021 ஜூன் 01 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திக்  சுப்புராஜ்  இயக்கத்தில்  தனுஷ் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்‘.

வைநொட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளதோடு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல ஹொலிவூட்  நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' எனும் வசனத்துடன் முடியும் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X