2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

ரஜினியின் 173ஆவது படம்

S.Renuka   / 2026 ஜனவரி 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173ஆவது திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. 

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

அதில், சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். 

சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2' படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார். 

இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதில் கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தினை யார் இயக்க உள்ளார் என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

அதன்படி, தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .