2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் 'கீதா கோவிந்தம்' படத்தின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், சில வருடங்களிலேயே 'National Crush' என்ற பட்டத்தை பெற்றுவிட்டார். இந்திய மக்கள் பெரிய அளவில் கொண்டாடும் நாயகியான இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.45 முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவரம் இவ்வருட கணக்குப்படி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் நடிகை மற்றும் நடிகர்களின் சொத்து மதிப்பானது கோடிக்கணக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .