Editorial / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமீப நாட்களில் நான் மனம் திறந்து கைதட்டி ரசித்த படம் 'தி கேர்ள் பிரண்ட்' தான் என தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.
தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்', ‘புஷ்பா-2', ‘சாவா' போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக இருக்கின்றன.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்' படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது.
இதுபற்றி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்டுள்ள பதிவில், “சமீப நாட்களில் நான் மனம் திறந்து கைதட்டி ரசித்த படம் ‘தி கேர்ள் பிரண்ட்' தான். என்னைப் பொறுத்தவரை ராஷ்மிகா மந்தனா, நேஷனல் கிரஷ் மட்டுமல்ல. அவர் நேஷனல் விருதுக்கும் தகுதியானவர்.
‘புஷ்பா', ‘அனிமல்', ‘குபேரா' படங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கியவர், ‘தி கேர்ள் பிரண்ட்' படத்தில் அப்பாவித்தனத்தை முகத்தில் காட்டி நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago