R.Tharaniya / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 3’, ‘அரண்மனை 4’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராஷி கன்னா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மொழி பிரச்சினையாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வது இப்போதும் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ரீமேக் செய்யப்படும் ஒரிஜினல் படங்களை ஆன்லைனில் பார்க்க முடியும் என்பதால் பாலிவுட் அதை உணர்கிறது என அறிகிறேன். ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு மொழி பிரச்சினையாக இருப்பதில்லை. அதனால் ஒரிஜினல் கதைகளிலும் வெவ்வேறு வகை திரைப்படங்களை உருவாக்குவதிலும் பாலிவுட் கவனம் செலுத்த வேண்டும்.
நடிகர்கள் இப்போது மொழியைத் தாண்டி, சிறந்த படங்களில் தாங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறையும் அதன் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கிறது. அவர்களின் படங்களில் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். இந்தப் பன்முகத்தன்மையிலும் கூட நாம் ஒற்றுமையாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் உணர்வுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அது பொதுவான ஒன்றாகத்தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
38 minute ago
53 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
56 minute ago