Ilango Bharathy / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல மலையாள நடிகர் `கோட்டயம் பிரதீப்` தனது 61 ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக கொச்சியில் இன்று (17 ) காலமானார்.
கடந்த 2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான இவர் அதன் பின்னர் ‘ராஜமாணிக்யம்’, ‘2 ஹரிஹர் நகர்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தன. அதன் தாக்கமாக அதே போன்றதொரு கதாபாத்திரத்தை இயக்குனர் அட்லீ தனது ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் அவருக்கு கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது மரணம் கேரள திரையுலகத்தினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago