Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் தனது சொத்துகளை மகன் அபிஷேக் பச்சனுக்கும், மகள் சுவேதாவுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்துவிட்டதாக அமிதாப்பச்சன் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அமிதாப்பச்சன், "எனக்கு பிறகு சொத்துகள் மகன், மகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
நானும், எனது மனைவி ஜெயாபச்சனும் நீண்ட காலத்துக்கு முன்பே இந்த முடிவை எடுத்து விட்டோம்.
பெண் தனது கணவன் வீட்டுக்கு சென்று விடுகிறாள் என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனாலும் என் பார்வையில் அவள் எங்கள் மகள். அபிஷேக் பச்சனுக்கு இருக்கும் அதே உரிமைகள், எனது மகளுக்கும் இருக்கிறது'' என்று பேசி உள்ளார்.
அமிதாப்பச்சனுக்கு சொந்தமாக தற்போது 1,600 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சொத்துகளை பிரிக்கும் நிலையில் பாதி சொத்துக்கு அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யாராயும் உரிமையாளராக மாறப்போகிறார். (S.R)
11 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago