R.Tharaniya / 2025 ஜூன் 09 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
’இறுகப்பற்று’ படத்துக்குப் பின் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘ரெய்ட்’ படம் பெரியளவில் எடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் தயாராகி உள்ளது.
இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். நாயகனுக்கு திருமணம் தாமதமாவதால் இந்த சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இப்படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

45 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago