2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

வசூல் மழையில் “அவதார் 2”

J.A. George   / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய பிரம்மாண்ட ஹொலிவுட் திரைப்படமான 'அவதார் - த வே ஆப் வோட்டர்' படம் டிசெம்பர் 16ம் திகதி வெளியானது. தொடர்ந்து வசூலைக் குவித்து வந்த படம் தற்போது 2 பில்லியன் டொலர் வசூலைக் கடந்துள்ளது. 

இதன் மூலம் அதிக வசூலைக் குவித்த ஹொலிவுட் படங்களில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் 5 இடங்களில், “அவதார் 1, அவஞ்சர்ஸ் என்ட்கேம், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் - த போர்ஸ் அவேக்கன்ஸ், அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்” ஆகிய படங்கள் உள்ளன.

‛அவதார் 2' இதுவரையில், மொத்தமாக 2.04 பில்லியன் யுஎஸ் டொலர் வசூலித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 598 மில்லியனும், உலக அளவில் 1.43 பில்லியனும் இப்படம் இதுவரை வசூலித்துள்ளது. குறைவான நாட்களில் 2 பில்லியன் டொலர் வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையையும் இப்படம் பிடித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .