Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இந்தத் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்தத் திரைப்படத்துக்காக அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்கு ‘முன்பணம்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து திடீரென்று அந்தத் திரைப்படத்தில் இருந்து வடிவேலு நடிக்க மறுத்து விலகினார்.
இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். இதனால் நடிகர் வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேலு வாங்கிய ‘முன்பணம்’ தொகை ரூ.5 கோடியை இயக்குநர் ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
வடிவேலு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை, அவரை வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒரு திரைப்பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால், இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
26 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
26 Aug 2025