2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

விருதுகளை அள்ளுகிறது சூர்யாவின் படங்கள்

J.A. George   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சமீபத்தில் 5 தேசிய விருதை பெற்றது. தற்போது மீண்டும் ஒரு புதிய விருதுக்கு சூர்யாவின் அடுத்த படமான “ஜெய் பீம்” திரைப்படம் தேர்வாகியுள்ளது.

அதாவது நடிகர் சூர்யாவின் நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக லிஜோமோன் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. சமீபத்தில் இப்படத்திற்காக 12ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்தன.

இதில் இப்படத்தில் நடித்த ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விழாவில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி 12ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .