Ilango Bharathy / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் அஜித்தின் திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் திரையரங்குகளில் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் வலிமை திரைப் படம் வெளியாகும் திரையரங்கு முன்பு மோட்டார் கைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர், ரசிகர்கள் குவிந்திருந்த பகுதியை நோக்கி பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ரசிகர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026