Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’.
நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார்.
இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
16 minute ago